தமிழகத்தில் மினி கிளினிக்

நேற்று தமிழகத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில்,இதனிக்கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதனிடையே தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதிதாக டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

S. செந்தில்நாதன் இணை ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.