அரிய நிகழ்வு!

புதுடெல்லி: சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன.

இந்த அரிய நிகழ்வு, சரியாக சுமார் 397 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 21ம் தேதி ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை ‘மகா இணைவு’ என்று வர்ணிக்கின்றனர்

இந்த நிகழ்வின்போது, நம்முடைய கண்களால்(வெறும் கண்கள்) அந்த இருகோள்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை, சூரியன் மறைந்த அந்தி நேரத்தில் நாம் காணலாம். அதேசமயம், இந்த நிகழ்வைக் காண்பதற்கான சரியான நேரம் டிசம்பர் 21ம் தேதி மாலை 7 மணி என்று கூறப்பட்டுள்ளது.

தொடுவானத்திற்கு மேலே, தென்மேற்கு திசையில் தெரியவுள்ள அந்த நிகழ்வை, பார்வைக்கு தடை ஏற்படுத்தாத உயரத்தில் நின்று பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

S. சுரேஷ்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.