தாலி மஞ்சள் கயிற்றில்..
தாலி மஞ்சள் கயிற்றில் ஏன் கட்டப்படுகிறது.
பின்னணியில் உள்ள அறிவியல்?
பொதுவாக நமது இந்து சமயத்தைப் பொறுத்தவரை, திருமணத்திற்கு மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது பாரம்பரியமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கம்.
நம்முடைய முன்னோர்கள் செய்த அனைத்து செயல்களிலும், ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கும்.அதை போலத்தான் மஞ்சள் நிற தாலியிலும் அறிவியல் உண்மை இருக்கின்றது.
தாலி மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும்.
பெண்கள் அதில் குளிக்கும் போது மஞ்சள் பூசி குளிப்பது வழக்கம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி. மஞ்சளை நீரில் கரைத்து உடலெங்கும் பரவும் பொழுது, நமது உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்து ஆரோக்கியமாக இருக்க உதவும்.
திருமணமான அந்த பெண் அடுத்த மூன்று மாதங்களில் தனது மகப்பேறு காலத்தில் தன் வாரிசை சுமக்க தயாராகின்றாள். அப்பொழுது அந்த பெண்ணிற்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கிருமிநாசினியான மஞ்சள் தாலியானது தாயையும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காகத் தான் தாலி மஞ்சள் கயிரில் கட்டிக் கொள்கின்றனர்.
மருதாச்சலம்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.