மெரினாவில் ஸ்மார்ட் வண்டி கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 14-ம் தேதியில் இருந்து கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது
தமிழகத்தில் ஊரடங்கின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி
இல்லாமல் இருந்து வந்தது. அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை கொண்டு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்றும், டிச.21 முதல் 26 வரை அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை
பரிசீலித்து ஜனவரி 6-ல் இறுதி செய்யப்படும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்
.இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடையே இருக்கும் என நம்பி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
தமீம் அன்சாரி செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.