சினிமா மெகா ஸ்டாருக்கு குண்டுதுளைக்காத ஆடம்பர சொகுசு கேரவன்! December 11, 2020December 31, 2020 admin 0 Comments மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி வாங்கியுள்ள புதிய குண்டு துளைக்காத கேரவன் அனைவரையும் பரபரப்பாகி இருக்கிறது. வால்வோ பஸ்சில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கேரவன், நடமாடும் வீடு போல வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதில் படுக்கையறை, டாய்லெட், மினி தியேட்டராக்கும் டிவி அமைப்பு, சமையலறை உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன என்று சொல்லப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் தேசம் முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில், கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு முதலில் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டுக்குள் இருக்கும்படி பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். அதை முறையாகக் கடைபிடித்த நடிகர் மம்மூட்டி, வீட்டிலேயே தங்கியிருந்தார் .பின்னர் பல மாதங்களுக்கு பிறகு அரசு தளர்வுகளை அறிவித்த பின்னர், கிட்டத்தக்க 275 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு அவர் சமீபத்தில் வெளியே வந்தார். அப்போது அவருடன் நடிகர் ரமேஷ் பிஷராடி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், சினிமா தயாரிப்பு நிர்வாகி பாதுஷா போன்றோரும் வந்தனர். கொச்சியில் உள்ள கடை ஒன்றில் அவர் கட்டன் சாயா குடித்த புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி இருந்தது . இந்நிலையில், மெகா ஸ்டார் மம்மூட்டி வாங்கியுள்ள புதிய குண்டு துளைக்காத கேரவன் ரசிகர்களை மிகுந்த பரபரப்பாகி இருக்கிறது. இதில் வேனுக்குள் அமர்ந்தால் எந்த அதிர்வும் ஏற்படாதவாறும் புல்லட் புரூப் கண்ணாடிகள் இணைக்கப்பட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த கேரவனில், ஒரு வாரத்துக்கான தண்ணீரை சேமிக்கும் தொழிநுட்பமும் உள்ளது . இந்நிலையில் இந்த கேரவன் பற்றிய செய்தியும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன .கார்த்திகேயன் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.