மருத்துவ கல்லூரிக்கு காணொலிக் காட்சி மூலமாக பூமி பூஜை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே. பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம் தேனி வட்டம் வீரபாண்டி கிராமத்தில் கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்கள். மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலாளர் சண்முகம் இ.ஆ.ப,
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.