எஸ்பிபி நினைவு வனம்…

பாடும் நிலா,
பாலுவை பெருமைப்படுத்தும் எஸ்பிபி நினைவு வனம் கோவையில் உதயமாகிறது.
தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் கொடி கட்டி பறந்த மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவையில் நினைவு வனம் அமைக்கப்பட உள்ளது.
கடவுள் நமக்கு வழங்கிய இயற்கையை மீட்கும் வகையிலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ‘சிறுதுளி’ அமைப்பு உருவாக்கப்பட்டது. நகரில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாப்பது, காடுகளை பாதுகாப்பது என முக்கிய குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது ‘சிறுதுளி’ அமைப்பு. குறிப்பாக, இந்த அமைப்பு கோவையை சுற்றியுள்ள பகுதிகளில், 7 லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது.
இந்நிலையில், திரையுலகில் அழியா புகழ் பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்ற, கடைசி காணொலி இசை நிகழ்ச்சியின்போது, கொடிய கொரோனா வைரஸ், அன்னை பூமியை ஆக்கிரமிப்பு செய்வதற்கு நாம் செலுத்தும் விலை என தெரிவித்திருந்தார்.
மேலும், அன்னைக்கு நாம் செய்த பாதகத்தை மேலும் தொடராமல், சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளை செயல்படுத்தும் வகையில், ‘சிறுதுளி’ அமைப்பு, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியுடன் இணைந்து, நாளை பச்சாபாளையம், ஆபீசர்ஸ் காலனி வளாகத்தில், எஸ்பிபி வனம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது..
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இவ்வுலகில் வாழ்ந்த, 74 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 74 மரங்களை உள்ளடக்கிய நகர்ப்புற வனம் உருவாக்க உள்ளது. இதில் இசைக்கருவிகள் உருவாக்க பயன்படும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
மேலும், இறைவனினுக்கு பிரியப்பட்ட ஸ்தல விருட்சங்கள் மற்றும் இசைக்குறிப்பு வடிவத்தில் நடப்பட உள்ளன. இந்த வனத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக, கிரீன் கலாம் நிறுவனரும், நடிகருமான விவேக் பங்கேற்ற உள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பெருமைபடுத்தும் இந்த விழாவிக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.