எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்
0.86 மீட்டர் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரன் 0.86 மீட்டர் அதிகரித்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள அரசு கணக்கிட்டு வெளியிட்டுள்ளது.

அதில் முன்பு இருந்த அளவை விட 0.86 மீட்டர் அளவுக்கு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இப்போது எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டராக உள்ளது. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறி இருக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து சீன அரசின் ஊடகமான ஷின்ஹுவாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியவாலி எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அளவீடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் ஆறு கட்டங்களாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை வல்லுநர்கள் அளந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

பூபதி செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்,

Leave a Reply

Your email address will not be published.