கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா..?

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா இந்த வகை உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
பொதுவாக நம் உடலில் ஏற்படும் அனைத்து இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு காரணமே கெட்ட கொழுப்புதான்.
அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு பலரும் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
எனவே உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை ஆரம்பத்திலே சில உணவுகள் மூலமாக கட்டுப்படுத்த முடியும்.
அந்தவகையில் கெட்ட கொழுப்பை கரைக்க கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஸ்டார்ச் நிறைந்த உணவுகளில் உருளைக்கிழங்கும் ஒன்றும். உருளைக்கிழங்கில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இவை மெட்டபாலிசத்தை துரிதப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
கடல்பாசியில் உள்ள புரதச்சத்து உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மையும் கொண்டது. இவை எல்லாவற்றையும் விட, உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைப்பதற்கு இந்த கடல்பாசி உதவுகிறது.
மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லை. வயிற்று எரிச்சலை ஏற்படுத்தும் என்றாலும் கூட, இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதில் கொழுப்பைக் கரைக்கும் அல்லியம் என்னும் பொருள் உள்ளது.
இஞ்சியை தோல் சீவி சாறெடுத்து அதனுடன் சிறிது ஏலக்காயுடன் 150 மில்லி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதை 50 மில்லி அளவுக்கு சுண்ட வைத்து குடித்து வர உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும்.
வெங்காயம், முட்டைகோஸ் போன்ற சில காய்கறிகளும் வினிகரில் ஊறவைக்கப்பட்டு புரோஃபயாடிக் உணவுகள் கிடைக்கின்றன. இந்த புளிக்க வைக்கப்பட்ட புரோ ஃபயோடிக் உணவுகள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்குவதைத் தடுக்கிறது.
அஸ்லாம்,
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.