இந்தக் கோயிலின் சுவற்றில் எழுதினால்எழுதியது நடக்கும் அதிசயம் குவியும் பக்தர்கள்.

பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளுவதில் ஹனுமர் முதன்மையானவர். பலசாலி, புத்திசாலி அனைத்தையும் தாண்டி கருணை உள்ளம் கொண்ட பகவான் ஹனுமருக்கான கோவில்கள் இந்தியா முழுவதிலும் ஏராளம் உண்டு.

அதில் நாடெங்கிலும் பல முக்கிய கோவில்களும் இருக்கின்றன. அதில் ஒரு ஹனுமர் கோவில் வித்தியாசமானது. மற்ற ஹனுமர் கோவில்களில் மலர்கள், இனிப்புகள் ஹனுமருக்கு பிடித்தமான லட்டு போன்றவை படைத்து வணங்குவர். ஆனால் வித்தியாசமாக பீகாரில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் கையில் பேனா அல்லது பென்சிலுடன் செல்கின்றனர்.

பீகாரில் மனோகமா என்ற அமைந்துள்ளது இந்த கோவில். இந்த கோவிலின் சுவற்றில், ஹனுமரை வேண்டிக்கொண்டு எதை எழுதுகிறோமோ அது நடப்பதாக நம்பப்படுகிறது.

இந்த கோவிலின் முக்கியத்துவமும், இதன் அதிசய தன்மையும் அறிந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர். இந்த கோவிலின் சுவற்றில் எழுதும் பக்தர்களின் குறைகளை அனுமர் தீர்ப்பதாக நம்பிக்கை.

இந்த கோவில் அமைந்திருக்கும் இடம், பீகாரில் உள்ள காமேஸ்வர் சிங் தர்பாங்கா சமஸ்கிருத பல்கலைகழகத்தின் முன்னாள் இருக்கும் குளத்தின் கரையில் மோதி மஹால் என்ற இடம் அமைந்துள்ளது அங்கிருப்பது தான் மனோகமா கோவில்.

இந்த கோவிலின் பராமரிப்பு மற்றும் மேற்பார்வை காமேஸ்வர் சிங் அறக்கட்டளையின் கீழ் இருக்கிறது. இந்த கோவிலை உருவாக்கியவர் தர்பாங்கா மன்னரால் உருவாக்கப்பட்டது. இந்த கோவிலில் இருக்கும் அர்ச்சகரர்கள் கூற்றின் படி இந்த கோவிலில் ஒரு நாளில் மட்டும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை எழுதி வணங்க இங்கே வருகை புரிகின்றனர். குறிப்பாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இங்கே கூட்டம் நிரம்பி வழிகிறது.

பலவிதமான பிரச்சனைகளும் இங்கே வேண்டுதலாக வைக்கப்பட்டாலும், குழந்தையின்மை மற்றும் திருமணம் தொடர்பான சிக்கல்களை தீர்த்து வைக்கும் கருணாமூர்த்தியாக ஹனுமர் இருக்கிறார். இங்கே எழுதப்படும் வேண்டுதல் நிறைவேற்றப்பட்ட பின் பக்தர்கள் ஹனுமருக்கு பிரசாதம் அர்பணித்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர். குறிப்பாக லட்டு பிரசாதம். ஏராளமான அரண்மனைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இடம், இந்த கோவிலை சுற்றி தோட்டம் மற்றும் அப்பகுதியின் பெரும் கவியான நாகர்ஜூன் அவர்களின் சிலையும் இங்கே உண்டு.

இங்கே எழுதப்படும் வேண்டுதல்கள் குறித்து சொல்லப்படும் மற்றொரு முக்கிய அம்சம் யாதெனில், நீங்கள் எழுதியதை வேறு யாராவது படிக்க நேர்ந்தால் அது நிறைவேறாமல் போகவும் வாய்ப்புண்டு என்பதே.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.