நம் கனவில் இறந்தவர்கள் வந்தால் நல்லதா கெட்டதா?

நாம் அனைவரும் தூங்கும்போது கனவுகளைப் பார்க்கிறோம். அவற்றில் சில கவர்ச்சிகரமானவை, மர்மமானவை, பயமுறுத்தும் கனவுகள் என பல வகையான கனவுகள் வருகின்றன.

ஆனால் நாம் கனவு கண்ட உடனேயே 50% கனவுகள் மறந்துவிடுமாம்.. காலையில் எழும் போது கிட்டத்தட்ட 90% கனவுகள் மறந்து வெறும் 10% கனவுகள் மட்டுமே நினைவில் இருக்கும் என்று கனவுகள் பற்றி ஆராயும் ஒரு சில மனோதத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கனவுகள் உங்கள் மயக்கமற்ற ஆசைகள் என்று நம்புகிறார்கள்.

நீங்கள் எந்த ஜாமத்தில் கனவு காண்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் பலன் என்பது மாறுபடும். பொதுவாக பகலில் வரும் கனவுகளுக்கு பலன் கிடையாது. இரவுப் பொழுதில் கடைசி ஜாமத்தில் காணும் பலனிற்கு முழுமையான பலன் உண்டு. அந்த வகையில், நம் கனவில் இறந்தவர்கள் வந்தாலோ அல்லது இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டாலோ என்ன அர்த்தம் என்று பார்க்கலாம்..

இறந்தவர் உங்கள் உறவினர் அல்லது நண்பர், நன்றாகத் தெரிந்த நபர் எனும் பட்சத்தில் அவருக்குச் செய்ய வேண்டிய கடன் ஒன்று பாக்கி இருக்கிறது என்று அர்த்தம்.. அதாவது அவர் உயிருடன் இருந்த போது, நாம் அவருக்கு எதையோ ஒன்றைச் செய்கிறோம் என்ற வாக்குறுதியைத் தந்துவிட்டு அதனைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கலாம்.

அதனை நினைவிற்குக் கொண்டு வருகிறார்கள் அல்லது அவர் தனது வாரிசுகளுக்கு எதையோ ஒன்றைச் செய்ய வேண்டி நம்மிடம் வேண்டுகோள் வைப்பதாகவும் பொருள் கொள்ளலாம். ஒருவேளை கனவில் நம் பெற்றோர்கள் வந்தால், கண்டிப்பாக அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களை செய்தாக வேண்டும். இன்னும் ஒரு சிலர் இறந்துபோன அரசியல் தலைவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டதாகச் சொல்வார்கள். ஆனால் அது அவர்களது ஆழ்மனதில் உள்ள கற்பனையின் வெளிப்பாடு மட்டுமே.. எனவே அதுபோன்ற கனவுகளை பொருட்படுத்த வேண்டாம்..

S.முஹம்மது ரவூப்

தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்.

Leave a Reply

Your email address will not be published.