மெஸ்ஸி யுடன் இணைந்து மீண்டும் விளையாட ஆசைப்படுகிறேன் நெய்மார்!

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது. பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்காக விளையாடி வருகிறார். இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த நெய்மாரிடம், அர்ஜென்டினா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி பி.எஸ்.ஜி. கிளப்பில் இணையலாம் என்ற தகவல் தொடர்பாக கேட்கப்பட்டது.

அதற்கு நெய்மார் அளிக்கையில், மெஸ்சியுடன் இணைந்து நான் மிகவும் உற்சாகமாக விளையாடி இருக்கிறேன். அது போன்று மீண்டும் அவருடன் இணைந்து ஆட ஆசைப்படுகிறேன்

அவர் இங்கு (பி.எஸ்.ஜி. அணி) வந்து எனது இடத்தில் விளையாட முடியும். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருடன் கைகோர்த்து அடுத்த ஆண்டு விளையாட விரும்புகிறேன். நாங்கள் இதை செய்தாக வேண்டும் என்று கூறினார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.