வீட்டில் தனி பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே இனி புது கார் வாங்க முடியும்!
கார் நிறுத்த வீட்டில் தனி இடம் இருக்கிறது என்ற ஆதாரத்தை காட்டினால் மட்டுமே புதிதாக கார் வாங்க பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறையை கொண்டுவர கர்நாடகா அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், அதனை சரிசெய்ய அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பார்க்கிங் கொள்கை 2.0 குறித்து முதல்வர் எடியூரப்பா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதிதாக கார் வாங்குபவர்கள் , வாகனத்தை நிறுத்துவதற்கு வசதி இருக்கிறது என்று பொறுப்பு கடிதம் வழங்கினால் மட்டும் புது வாகனத்தை பதிவு செய்ய அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது . இது குறித்து வரைவு கொள்கையை இறுதி செய்து அமைச்சரவை ஒப்புதலுக்கு வைக்குமாறு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார் . இதன்மூலம் கார்கள் சாலைகளில் நிறுத்துவது தடுக்கப்படும் என்பதால் கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்