கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம்!
புரெவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொடைக்கானல் புரெவி புயல் தாக்கம் அதிகரிக்கிறது. நல்லிரவு 1 மணி முதல் சூறாவளி காற்றுடன் மழையும் பேய்ந்த வண்ணம் இருக்கிறது.
புரெவி புயலின் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் புயலின் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடைக்கானல் மலைப்பகுதியில், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத் தளங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி, மோயர் பாய்ண்ட், தூண் பாறை, பைன் பாரஸ்ட் உட்பட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பேரிஜம் ஏரி, மன்னவனூர் சுற்றுச்சூழல் மையம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு, கடந்த மார்ச் மாதம் முதலே சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
R.ரமேஷ்
கொடைக்கானல் செய்தியாளர்
தமிழ் மலர் மின்னிதழ்