திருக்குறள் எழுச்சித் திருநாள் – 2021

திருக்குறள் பண்பாட்டு மடைமாற்று விழாக்கள் என்னும்
திட்டத்தின்படி, ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல்
நாளைத் ‘திருக்குறள் எழுச்சித் திருநாள்’ எனக் கொண்டாடி வருகிறோம்.

அந்த நாளை, இந்த ஆண்டு,
காணொளிவழித் திருக்குறள் கவியரங்கமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அனைவரும் பங்குபெற அன்போடு அழைக்கிறோம்.

திருக்குறள் எழுச்சித் திருநாள் காணொளிவழித் திருக்குறள் கவியரங்கம்

காலம் : 01-01-2021. வெள்ளிக்கிழமை.
காலை 10-00 மணி – 12-00 மணி

பொருள் :
‘வள்ளுவமே நம் மறை’

நெறிமுறைகள்:-

1. மரபுக் கவிதை,
புதுக்கவிதை,
குறும்பா எனக் கவிதை
எந்தப் பாவிலும்
இருக்கலாம்.

2. கவிதை எட்டு அடிகளுக்குள் மட்டுமே – 32 சீர்களுக்குள்
மட்டுமே – இருத்தல்
வேண்டும்.

3. தங்கள் முகவரியுடன் கவிதையை அலைபேசியில் தட்டச்சு செய்து +919944727076 என்ற புலன எண்ணிற்கு அனுப்பவேண்டும்.

4 கவிதைகளை
15-12-2020-க்குள்
அனுப்புதல் வேண்டும்.

5. தேர்வு பெறும் கவிதைகள்
அனுப்பிய எல்லாக்
கவிஞர்களுக்கும்
‘திருக்குறள் கவிதைச் செல்வர்’
என்னும் விருது
வழங்கப்படும்.

6. தேர்வு பெறும்
கவிதைகள்
விழாவில் வழங்க
வாய்ப்பு வழங்கப்படும்.

7. விழாவில் கவிதையைப்
படிக்கலாம் – பாடலாம்

8. விழாவில் கவிதை
வழங்கும் போது
தொடக்க வணக்கம் ஒரு
தொடர் அளவில் மட்டுமே
இருத்தல் வேண்டும்.

கவிதை வழங்கும்போது
படித்த அடியை மீண்டும்
படித்தல் கூடாது.

இவற்றுள் எந்த விதி
மீறினும் விருது இல்லை
என்றாகும்.

விழாவில் கவிதை
வழங்க
சுமார் 60 கவிஞர்களுக்கு
வாய்ப்பு வழங்கப்படும்.

தேர்வு பெறும்
கவிதைகள்
அனைத்தும் நூலாக்கம்
பெறும்

வாருங்கள், கவிதை
பாடுங்கள்
திருக்குறள் எழுச்சியை
உலகறியச் செய்யுங்கள்

– பொறுப்பாளர்கள் உலகத் திருக்குறள் படைப்பு மையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published.