இயற்கை மருத்துவம் – பொடுகை போக்கும் பீட்ரூட்!!!

விலை குறைவான அதேநேரம் உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்துள்ள பீட்ரூட்டில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். பீட்ரூட்டில் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், தாமிரம், செலினியம், துத்த நாகம், இரும்புச் சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட் வேக வைத்த நீரில் வினிகரை கலந்து தலைக்குத் தடவி ஊற வைத்து குளித்தால் பொடுகைப் போக்கிவிடலாம்.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை சாறு எடுத்து குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பீட்ரூட் சாறு மூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, முதுமையில் ஏற்படும் மறதி நோயான ‘டிமென்சியா’, ஞாபக மறதி நோயான ‘அல்சைமர்’ போன்றவையை தடுக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.